*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

2/21/2008

நீயின்றி நானிலை


என் இதயத்தில் நீனில்லை என்கிறேன்
உன் இதயமே நான் தானடி என்கிறாய்
என் பார்வையில் நீயில்லை என்கிறேன்
உன் கண்ணின் மணியே நான் தான்டி என்கிறாய்
என் மனசுக்குள் நீயில்லை என்கிறேன்
உன் மனசாட்சியே நான் தானடி என்கிறாய்
உன் வார்த்தைகள் பொய் என்கிறேன்
அதிலுள்ள வார்த்தைகளே நான் தானடி என்கிறாய்
மாலையிட வருவாயா என்கிறேன்
உன் கழுத்தே நான் தானடி என்கிறாய்
என் சுவாசத்திற்கு உயிர் கொடு என்கிறேன்
உன் சுவாசமே நான் தானடி என்கிறாய்
என்னை ஞாபகம் இருகிறதா என்கிறேன்
மறந்தால் தானே நினைக்க என்கிறாய்
கடைசி வரை கூட இருப்பாயா என்கிறேன்
உன் உயிரே நான் தான்டி என்கிறாய்
உள்ளம் திறந்து கேட்கிறேன்
உதரிவிடாதே என்கிறேன்
உரிமையுடன் சொல்கிறேன்
நீயின்றி நானில்லை என்கிறாய்
இத்தனையும் சொன்ன நீ இன்று
ஏன் என்னை ஏற்க மறுக்கிறாய்??

2/14/2008

கொஞ்சம் நில் காதலே


காக்க வைத்தல் காத்திருத்தல்
இரண்டுமே சுகமானது தான்
உனக்காக மட்டுமென்றால்


உன் நினைவுகளை சுமந்தபடி
உன் சம்மதமின்றி
காத்திருக்கிறேன் உனக்காக.....

இன்று மட்டுமல்ல என்னுயிர் ..
உள்ளவரையில்நீதான் ...
எந்தன் ஒளிவிளக்கு....
நான் வளர்க்கும் கனவுகளுக்கு
எல்லையே இல்லை...

அவையாவும் நிறைவேற நீ...
எந்தன் கரம் பிடிக்க வேண்டும்....
இன்றைய நாள்தனில்

காலத்தையும் கடந்து
உயிரோடு வாழும் காதலிடம்...
என் அன்பான வேண்டுகோள்....
உன்னால் முடிந்தால்
என்னவனிடம் என்னை
சேர்த்துவிட்டுச் செல்.....

2/13/2008

ஓர் நிலவின் காதல்


காற்றலையில் என் குரல் கேட்ட மறுகணமே
உன் இதயத்தை என் காலடியில்
தொலைத்து விட்டதாய் கூறினாய்...
நானும் அப்படி தான்...
காதல் மலர்ந்தது...
காலங்கள் மறைந்தன.

ஓர் அந்தி மாலை பொழுதில் நாம்
இணைந்த அதே இணையத்தில்
நம் காதலை நிறுத்திக்கொள்ளலாம்
என்று நீ கூறிய போது என் கண்ணை
என்னாலே நம்பமுடியவில்லை..
உனை நீங்க முடியாமல் அழுது தவித்தேன்..

பொங்கிவந்த உன் நினவுகளை
ஆசையாக வடித்து மடலிட்டேன் உனக்கு..
உன் வாழ்வில் எனக்கோர் இடம் கேட்டு.
காதலர்களையும் காதலையும் நேசிக்க
தெரிந்த உனக்கு ,,ஏன் எற்றுக்கொண்ட
என் காதலை மறுப்பது போல் நடித்தாய்..

நேற்று நான் நேசித்ததும்..
இன்று நான் நேசிப்பதும்..
நாளை நான் நேசிக்க போவதும்
அன்பே உனை மட்டுமே....

அன்பே... என் தேடல் ஒரு
காணல் நீரென்றுதெரிந்திருந்தும்..
உனை நேசித்தஇதயத்தால்
உனை மறக்க முடியவில்லை...
உன் பெயர் சொல்லித்துடிக்கும்,,
இதயமது நின்று போனாலும்...
என் கல்லறை உன் பெயரை,
உச்சரித்துக்கொண்டே இருக்கும்...!!!

2/05/2008

அஞ்சவில்லை....

கற்பனையில் கூட நான்

உன்னை என்னிலிருந்து தள்ளி
வைத்துதான் பார்த்ததுண்டு
இப்போது நீயும் அப்படித்தான்.....

வஞ்சகன் நீ எனை இன்றல்ல
என்றோ வஞ்சித்து விட்டாய்
உன் வஞ்சை தெரியாத என்
பிஞ்சு மனம் கூட உன் போலி
காரணங்கண்டு அஞ்சவில்லை.....

உன் வருகைக்காக.....!!!

கரைகள் தன் அலையை

பார்த்து நிற்கின்றன......!

கவிஞனின் கண்கள் தன்
கவிதையை பார்த்து நிற்கின்றன.......!!

நானோ உன் வருகையை
எதிர் பார்த்து நிற்கின்றேன்.......!!!

1/31/2008

இது தான் காதல்....

கண்கள் விளையாடி காதல் வந்தது

இதயம் கலவாட துணிவு தந்தது...
அழுதாலும் தீரா சுமையே
காதல் தீயில் கருகும் இமையே...

கண்களில் தோன்றும் கண்ணீரில்
காட்சிகளும் மறைந்து போகும்.....
காதலின் மடியில் தானே
இறுதியாய் இதயம் தூங்கும்....
ஓடும் மேகங்கள் ஓய்வு கொள்ளலாம்
மழையாய் பொழிந்தே பாரம் தீர்க்கலாம்....
இதயம் தந்து இதயம் வாங்கும்
காதல் என்றும் வெல்லும்.......

என் நண்பன்....

நட்புக்கு பிரிவேது

பிரிந்தால் அங்கே நட்பேது

எங்கோ மொழி தெரியாத
ஊரில் நீ வாழ்ந்தாலும்

நம்மை இணைத்தது
நம் தாய்மொழி

அதுபோல் நம் மண்ணை
நீ சிந்திக்கும் போது
என்னை சந்திப்பாய்

உன்னை...

உன்னை கண் சிமிட்டாமல்

பார்க்க வேண்டும்
என்று ஆசைப்பட்டேன்,

ஆனால் இப்பொழுது
கண் சிமிட்டும் நேரமாவது
பார்க்க மாட்டோமா
என்று ஏங்குகின்றேன்

1/30/2008

நம் நட்பு.....

எங்கிருந்தோ வந்தேன்

இன்பமாய் பழகினாய்..
பிரியமனமில்லை ....

நீ எந்தன் உறவுமல்ல -
ஆனால் உன் துயரம் கண்டு,
என் மனம் வாடும்..
உன் இன்பம் கண்டு,
என் மனம் துள்ளும்....

இது தான் நட்பு என்பதா??
எனக்கு புரியவில்லை நண்பனே..
உனக்கு புரிகிறதா?
அறிந்து கொண்ட மாத்திரத்தில்
ஆழமாய் துளிர்விட்டு
அழகாய் பூத்த,
அற்புத உறவு நம் நட்பு.....

நீயே எந்தன் அன்புத் தோழன் மிர்ஷான்.....
என்றும் நான் உந்தன் உயிர்த்தோழி நிஷானி...






1/28/2008

வாழ்வை வாழ்ந்து பாருங்கள்......

புன்னகைத்து பாருங்கள்

நட்புகள் கிடைக்கும்"

பிரார்த்தனை செய்யுங்கள்
நல்ல மனம் கிடைக்கும்
நம்பிக்கை வையுங்கள்
வெற்றி கிடைக்கும்

உண்மையாய் உறுதியோடு
உழைத்து பாருங்கள்
வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும்

நாம்.....


எங்கிருந்தோ வந்தேன் ..................

இன்பமாய் பழகினாய்.............

துன்பமாய் பிரிகின்றோம்..........

என் ப்ரியமான தோழன்.......


எங்கிருந்தோ வந்தேன் ..
எனை உன் நண்பியாக்கிக் கொண்டாய்
நம் உறவுக்கு இதுவே தொடர் என்றால்,
பாசத்தை காட்டி கடைசி
முற்றுப்புள்ளியாய் மாற்றுகின்றாய்.
இவ்வுறவை காட்டி நாம்
பிரியும் நாட்களே நட்பு தான்.........



1/23/2008

வேண்டும் வேண்டாம்......


அன்பே காதல் வேண்டும்
காமம் வேண்டாம்
அன்பே அறிவு வேண்டும்
அதற்கு நீ அடிமையாக வேண்டாம்

அன்பே உன் அன்பு வேண்டும்
உன் அழகு வேண்டாம்அன்பே

உன்னோடு வாழ வேண்டும்
அதற்கு நீ உப்பாக வேண்டாம்

கண்ணீர் காணிக்கை.....


கண்ணெதிரே வந்தவன்
கண்விழி புகுந்து
கற்பனையைத் தந்தவன்
கடைசியில் கண்ணீரையும்
காணிக்கை ஆக்கினான்

வசந்த காலம்.....

வாழ்வில் பொய்யானதெல்லாம் மெய்யாகுது..

முள்ளானதெல்லாம் பூவாகுது...
கனவானதெல்லாம் நனவாகுது....
மனம் கொண்டதெல்லாம் கவியாகுது....

சொந்தங்கள்......


விண்ணுக்கு விண்மீன்கள் சொந்தம்
மண்ணுக்கு மனிதன் சொந்தம்
கண்ணுக்கு கண்ணீர் சொந்தம்
உடலுக்கு உயிர் சொந்தம்
என் உண்மை காதலுக்கு நீதான் சொந்தம்

1/20/2008

நீயாக வேண்டும்


நான் நானாக இருக்கும் வேளை
நீ எவ்வழியாய் புகுந்தாய்
என் இதயத்தில்
செத்துப் போனேனடா-
உன் வசீகரப் புன்னகையால்

எனக்குள் உன்னை வீழ்த்தி
என்னை உயிர்ப்பித்தவனே
மெளனத்தின் நிசப்பதங்களில் கூட
நான் சத்தமின்றி யுத்தமின்றி
யாசிப்பது உந்தன் நிழலை மட்டுமே

சமரசம் புரிந்த உன் விழிகளில்
சரணடைந்த நாள் முதல்
சத்தியமாய் உன்னில்
பைத்தியமானேனடா

யாருமே இல்லாத தேசத்தில்
உன்னுடன் சிறகு இல்லாமலே
சிருங்காரமாய்
சிறகடித்துப் பறக்கின்றேன்
கனவெது நினைவெது புரியாது
தவிக்கின்றேன்
தினம் தினமும்!
உன் பெயரை பலமுறை
உச்சரித்துப் பார்க்கின்றேன்
ஏன் தெரியுமா?

என் கடைசி நிமிஷத்திலும்
கூட என்னுடன் என்னுள்
நீயாக வேண்டும்

என்னவன்

என்னுடைய வீணையில்

மீட்டிடும் தந்தி அவன்

என்னுடைய தோட்டத்தில்
நீந்திடும் தென்றல் அவன்

என் இதயத்தின் உயிராய்
இருப்பவன் அவன்

என் கன்னத்தில் வடிந்திடும்
கண்ணீரும் அவனே

நிஷாவின் குட்டிக் குட்டி கவிகள்

பேனை = என்னை எனக்கே அறிமுகம் செய்த என் உயிர் தோழி

நட்பு = இன்பத்தை இரட்டிப்பாக்கும் துன்பத்தை பாதியாக்கும்

டயரி = இறந்துபோன இதயத்தின் கல்லறை

கோபம் = அறிவிலிகளுக்கு சற்றென பிறக்கும் 3 எழுத்து குழந்தை

கண்ணாடி = உன்னை உனக்கு காட்டும் செயற்கை கண்

சொந்தம் = சொல்லாமலே சென்றிடும் செல்வங்கள்

என் உயிரில் இருப்பவளே

ஒரு நாள் உனை பார்த்தேன்

தினமும் பார்க்க கிடைக்குமா
ஏங்கினேன் தினம் தினம்

உன் வருகையால் என் உள்ளம்
எங்கும் சந்தோஷ வாசம்
கிடைக்குமா கால்ம் முழுதும்
உந்தன் புன்னகையின் வாசம்
உன் அன்பு ஒன்றே போதுமடி

கோபம் கொண்டால்
என் உயிரின் வலி அறிவாயா?
என் உயிரில் இருப்பவள் நீயல்லவா?

1/10/2008

நிஷாவின் குட்டி கவிதை.......


மனசாட்சி *-* இவ்வுலகில் உனக்கென உன்னுடன் பிறந்த கடவுளின் நெருங்கிய நண்பன்

வெட்கம் *-* பெண் என்று அடையாளம் காட்டும் மரபுக் கவிதை

சந்தேகம் *- * அன்பின் உச்சகட்டத்தில் உறவுக் கண்ணாடி மீது விழும் பாராங்கல்
காலம் *-* உயிர்களின் முடிவினை அறிவித்துக்கொண்டிருக்கும் ஒரு வகை கருவி

1/09/2008

சம்மதம் தருவாயா


காக்க வைத்தல் காத்திருத்தல்
இரண்டுமே சுகமானது
உனக்காக மட்டுமென்றால்

உன் நினைவுகளை சுமன்தபடி
உன் சம்மதமின்றி உனக்காக
நான் காத்திருக்கின்றேன்

இன்று மட்டுமல்ல் என்னுயிர்
வாழும் வரை நீ தான்
எந்தன் ஒளிவிளக்கு

நான் வளர்க்கும்
கனவுகளுக்கு எல்லையில்லை
அவையாவும் நிறைவேற
நீ எந்தன் கரம் பிடிக்க வேண்டும்

காலம்


வாழ்க்கை எனும்
தீவினில் நடக்க
காலம் எனும்
கால்கள் தேவை