*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/23/2007

நீயும் நானும்


கண்ணுக்குள் உன்னை வைத்தேன்

காணாமல் போவாய் என்று

மனதுக்குள் உன்னை வளர்த்தேன்

மலராய் மலர்வாய் என்று

கற்பனையில் உன்னை வளர்த்தேன்

கவி கோவையாவாய் என்று

ஆனால் இவை அனைத்தையும் இழந்தேன்

நீ என்னை எற்க மறுத்த நேரம்

என் உயிரையும் சேர்த்து

10/19/2007

நட்பு..........................

நீயே எந்தன் உயிர் நாடி

என்றும் நான் உந்தன் உயிர்த்தோழி

நீ எந்தன் மனதில் ரோஜாப்பூ

என்றும் கண்டதில்லை ரோஜாமுள்

பழகினோம் சில நாட்கள் பிரிய முடியவில்லை

நீ எந்தன் உறவுமள்ள........

ஆனால் நீ துயரடைய என் மனம் வாடும்
உன் இன்பம் கண்டு என் மனம் துள்ளும்


ஏன நண்பனே இது தான் நட்பென்பதா???

எனக்கு புரியவில்லை................. உனக்கு புரிகின்றதா?

அறிந்து கொண்ட மாத்திரத்தில்

ஆழமாய் துளிர்விட்ட அற்புத விருட்ச்சம்

கண்ணீர்




என் கண்களில் இருந்து

வருவது எல்லாம் கண்ணீரென்

எண்ணவேண்டாம்

அவை ஒவ்வொன்றும் ..............

நொருங்கிப்போன என் இதயத்தின்

வெடிப்புகளில் இருந்து

வரும் உதிரத்துளிகள்

புரிந்து கொள்


என் இதயத் தோட்டத்தில்

ஆயிரம் பேர் காதல் விதை

தூவிச் சென்றது உணமை தான்

ஆனால் அதில் வேர் விட்டு

விருட்ச்சமாய் இருப்பது

நீ மட்டும் தான்

வரப்போகும் என் கணவனுக்காக

பொன்னகை இல்லையென்றால் பரவாயில

புன்னகை மாறாத பூமுகம் தேவை
மாளிகை இல்லையென்றால் பரவயில்லை

இதய கொயில் திறந்திருந்தால் போதும்
குலம் எதுவானாலும் பரவயில்லை
குணம் உயர்ந்தவனாய் வேண்டும்

பரிசு.................






வயல் எங்கும் தண்ணீர்


அது பயிருக்கான பரிசு


என் வாலிபம் எங்கும் கண்ணீர்


அது என் காதலுக்கான பரிசு

10/16/2007

எதற்கு???????????




வண்டு மொய்க்காத மலர் எதற்கு?

பனித்துளி இல்லாத மேகம் எதற்கு?

அலை இல்லாத கரை எதற்கு?

காதல் இல்லாத வாழ்க்கை எதற்கு?

நீ இல்லாது நான் எதற்கு?

போகும் போது...............


உறங்காத என் விழிகளுக்கு

உறக்கத்தை பரிசளித்து விட்டு போ

உன்னால் இறந்து கிடக்கும்

என் இதயத்தை உயிர்ப்பித்து விட்டு போ

தனிமையை தகர்த்க்தெறிந்து

இனிமைக்கு வழிவகுத்தவனே

சுவாசத்தில் தேன் தடவி சுகம் காணும்

ஜீவனுக்கு சுவனத்தை பரிசளித்து விட்டு போ

அன்பேஉறக்கம் இன்றி விழித்திருக்கும்

என் விழிகளுக்கு கனவுகளை சமர்ப்பித்து விட்டு போ

10/15/2007

காதல்


கண்ணீர் துளிகள்
சிந்தப்படுகின்ற போது தான்
காதலின் வேர்கள்
இதயத்திலே ஆழமாக பதிகின்றன

புரியும்..........


காதல் இளமையின் சிரிப்பு
இதற்கு நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
அன்பே
உன் பார்வையில் பாசத்தை
மட்டுமே பார்த்தேன்
பலி கொள்ளும் நோக்கத்தை அறியேன்
பிரிவு என்னும் கயிறைத் திரித்து
என் இதயத்தை கூக்கிலிட்டதற்கு பதிலாக
என்னையே கொலை செய்திருக்கலாம்
கண்ணீராவது மிச்சப்பட்டிருக்கும்
பரவாயில்லை என் இதயம் புரியாமல்
சீண்டி பார்க்கின்றாய்
என் நிலமை என்றாவது
உனக்கு புரியும் அப்போது
உன் இதயமும் சீண்டப்பட்டிருக்கும்

10/12/2007

காதலித்து விடாதே நண்பியே...............

நண்பியே காதலில்..கால் பதித்து விடாதே
கண்ணீரை சொந்தமாக்கி விடுவாய்
இன்பத்தின் முடிவுகள்

கன்னத்தில் கண்ணீராய் மாறிவிடும்
காதலித்து விடாதே நண்பியே

தனிமையில் புலம்பி
இருளில் காத்திருந்து
காலப்போக்கில்
பைத்தியக்காரியாகிவிடுவாய்
காதலித்து விடாதே நண்பியே

கடிதங்கள் எழுதியே
பேனா மையை முடித்து
உன்னுயிரையும் உயிரானவனுக்கு
சமர்ப்பணம் செய்துவிடுவாய்
அவனோ அலங்கார மேடையில்
ஆனந்தமாய் இருப்பான்
காதலித்து விடாததே நண்பியே

10/09/2007

கண்ணோடு கலந்து விடு.............


ஏங்குதே உன் அன்புக்காக
கன்னி இவள் மனது
நடு நிசியும் சுட்டெரிக்கும் நாற்றிசையும்
உலா வந்து காளையவன் கனவினிலே
கண்ணயர்ந்து போனேனே
வெண்மதியாய் உன்னைக் காணும் போது
மேகத்துக்கு பிடிக்காமல்
சுற்றமும் மறந்து விடுகின்ற வேளையில்
நீ என் கண்ணோடு கலந்து விட
நான் உன் நெஞ்சோடு சேர்ந்திடுவேன்
மன்னவனே கண் மலரும் போது
உன் நினைவுகள் பூத்துக்குலுங்குது
கண்ணா நீ வந்து விடு சீக்கிரமே
வைகறையில் கூடி வாழ்ந்திட

இதய வீணை









இன்றைய நாள் தனில்
நேற்றைய நினைவலைகள்
மீட்டிப் பார்க்கின்றேன்
நினைவுகளின் நாதம் அது
அது கறை படிந்த சுவர்களாய்
இதயத் தந்தியில் சிக்கிக் கொண்டு
இசை எழுப்ப மறுக்கின்றது

ரோஜாவே...............



பூக்களின் ஈரம் கண்டேன்

புன்னகை விரித்துஈரம் துடைத்தேன்

கண்களின் கவர்ச்சியால் பூத்து

தலையில் அழகு பார்த்தேன்

நீ இல்லை என்றால்

கவிஞனுக்கு அழகு வரியே இல்லை

புன்னகையால் பூத்து

என் மனதை பறிக்கிறாய்

என் வாழ்க்கையில் நீ பூப்பாயா?

அதை என்னவன் பறித்து வாழ







முந்திச் செல்கிறேன்.........................................




அன்பில் நீ என்னை முந்திச் செல்


அறிவில் நீ என்னை முந்திச் செல்


நட்பில் நீ என்னை முந்திச் செல்


அழகில் நீ என்னை முந்திச் செல்


ஆனால் மரணத்தில் மட்டும்


நான் உன்னை முந்திச் செல்கிறேன்







ஏன் மறுப்பு???



சோகம் போக்க சந்தோஷம் தந்தாய்
இருள் போக்க ஒளியை தந்தாய்

கவிதை வரைய கற்பனையை தந்தாய்

கற்பனையை தந்து காதலை தந்தாய்

காதலைத் தந்து ஏன் கண் காண மறுக்கின்றாய்?









10/08/2007

என்று வருவாய் நீ







கண்ணிமைக்குள் குடியிருக்கும்
உன்னை வடிக்கின்றேன்
கவிதைகளாய்பேனா முனைகளால்
கொவ்வை இதழால் சிரிக்கும் உன்னை
தரிசிக்கிறேன் தினமும்ம் உன் அன்பிற்காக
என மேல் காதல் கொண்ட உன்னை
நெருங்கத் துடிக்கின்றேன்
உன் காமக் கண்களுக்காக
என்றாலும் நீ நடத்தை கெட்டவன்
மரம் விட்டு மரம் தாவும் குரங்கினம்
என்றெல்லாம் வர்ணிக்கிறது
உன்னை இச்சமுதாயம்.....
கேட்டதும் துடிக்கிறது என் மனம்
அழுகிறேன் மனசுக்குள்
தவிக்கின்றேன் ஆறுதலடைய முடியாமல்

உன்னைக் காதலிக்கும் முதல் நாளாய்
நான் படும் துன்பம் கொஞ்சமல்ல
என்றாலும் தள்ரவில்லை
கசப்பென்று துப்ப முடியாமலும்
இனிப்பென்று விழுங்க முடியாமலும்
தவிக்கின்றேன் நான்

என்றாலும் உன்னை பார்த்த முதல் நாளாய்
உனக்காக காத்திருக்கின்றேன்
உன் மடி மீது துயில
என்று வருவாய் நீ????????????

எதிர்ப்பார்க்கின்றேன்

உனக்காய் ஈந்து கொடுக்க

என்னிடம் எதுவுமில்லை
என்றாலும்
என் கண்ணீரையாவது
நம் காதலுக்காக
காணிக்கையாக்குகிறேன்.....
இருந்தும் ஏற்கனவே
எல்லாம் இழந்தவள் நான்
ரணப்படுத்தப்பட்ட
என் இதயத்தினுள்
உன்னையும் சுமந்து
இனியும் என்னால்
அவஸ்த்தப்பட
இஸ்டமில்லை
நீ..........வாழ வேண்டியவன்
கண்ணே
என்னை போல் இறந்து வாழாது
வாழ்ந்துவிட்டு இறந்து போ
அதுவரைக்குமாவது
என்னோடுஎதிரே நின்று ......
தொந்தரவு செய்ய மாட்டாயென
எதிர்ப்பார்க்கின்றேன்

என் கண்ணீராற்றில் கவிதை வடிக்கும் உன் நினைவுகள்


பசுமையாக வளர்ந்த என்னை

காதல் பிணியில் மாட்டி விட்டு

வேடிக்கை பார்க்கும் ஆடவனே

ஒவ்வொரு நிமிடமும்

எனக்குள் நானில்லை

நீதானே பேசிக்கொண்டிருக்கின்றாய்....

ஆனால் நீ உனக்குள்

யாரோ கட்டிய தாஜ்மகாலை நிலை நிருத்தி

என் மண் குடிசையை இடித்து விட்டாய்


நானோ மேகமில்லாத வானத்தில் குடியிருக்க

நீயோ பசுமை கொட்டும் வனத்தில்

கருங்குயில் இசையமைக்க

சந்தோஷ ஊர்வலம்....

மகளிருடன் அலங்கோலமாய் நடக்கையில்

என்னுள்ளம் அனலைக்கண்ட நீராய் கொதிக்கின்றது


ஆனால் கண்ணே உன்னிதயத்தில் நானில்லாவிட்டாலும் என்னிதயத்தில் உன்னினைவுகள் கண்ணீராற்றில் கவிதை வடித்துக்கொண்டே இருக்கும்............

சுமையாக மனதில் சுமக்கின்றேன்


நீ போகும் வழி பார்த்து

உன் நினைவுகளுடன் நான் தொடர்வேன்

என் நெஞ்சம் என்னும் பஞ்சனையில்

உன்னை நான் ஏற்றிவைப்பேன்

உறங்காதா விழிகள் என்றால்

காத்திருப்பேன் காலமெல்லம்

கல்லறையில் கண்ணுறங்குவேன்

கடந்துவிட்ட காலத்தை

கண்ணீருடன் மீட்கின்றேன்
சுவையான நாட்களை

சோகத்துடன் மீட்கின்றேன்

மறக்க முடியுமா என்னால் உன்னை

மறைந்துவிட்ட நிஜங்களைதுடைத்திடும்

அந்த நினைவுகளைதுக்கத்தில்

கூட நான் மறவேன்

சுகமான அந்த நினைவுகளை

சுமையாக மனதில் சுமக்கின்றேன்

உனக்காக


சேகரித்த உன் நினைவுகளையும்

உறங்காத என் ஏக்கங்களையும்

நாளைய விடியலில்

உன் வருகையின் எதிர்ப்பார்ப்பையும் மட்டுமே

காதலின் சின்னமாக என்னிடம் விட்டுச் சென்றவனே

நம் காதலின் இறந்த காலத்தை

அன்று போல் இன்றும் இன்று போல் என்றும்

பசுமையுடன் நேசிக்கின்றேன்

உன் நினைவுகளை மட்டும் சுமந்த வண்ணம்

உன் வருகையை எதிர்ப்பார்த்து

நீங்காத நினைவுகளுடன்

சாகாமல் வாழ்கின்றேன் உனக்காக

என் நினைவெல்லாம் நீ


கனவுகளில் உன்னை அழைத்து

என் நினைவுகளை சொல்ல முயவில்லை

ஏனெனில் என் நினைவுகள்

எல்லாம் உன்னைப் பற்றிய கனவுகளே...............

பெண்ணே நில் கொஞ்சம் கேட்டுச் செல்


நீ ஜடையில் இட்ட மல்லிகை பூ கூட

உன் வாடலின் முன்னறிவிப்பு

நீ நெற்றியிலிட்டா கரும் பொட்டு

வாழ்க்கை இருட்டின் அறிவிப்பு பலகை

உன் கை வளையல்கள்

கை விலங்கின் மறைமுகம்

தாலி கயிறு கூட அடிமையின் அடையாளமே

பெண்ணே புரிகிறதா??

இப்போது நீ அணியும் அத்தனையும்

உன்னை அழகுபடுத்த அல்ல அடிமைப்படுத்த என்று!!


10/03/2007

முதல் முதல் பார்த்தேன் ...(magathi)

முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..........
முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்...............
இமையே சுமையாகும் உனைப்பார்க்கும் நேரம் இமையாய் இமை வேண்டும் எனக் கேட்கத் தோனும்..............மழையா......... வெயிலா........ மனதில் இப்போது........

முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..........
முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..................


தேவதைக்குப்பூ பின் வேஷம் வெட்கங்கள் கேட்கும் சன்யாசம்முன்தாணை பூவில் உன் வாசம் தினமும் வருமா ...நெஞ்சினில் வந்தது சந்தோஷம்..... நீ தானே கண்ணா என் சுவாசம்.....மை பூசும் கண்ணா பொய் பேசும்........ இது ஓர் வரவாய்யாரும் பார்க்காத ஓர் தங்கமான மாப்பிள்ள...........ஊர சீதனமா தந்தாகூட தப்பில்லமண நாள் வரும் நாள் அது தான் எப்போது ........மழையா வெயிலா மனதில் இப்போது..........
முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்....முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்...


ஆராரோ பாட ஆசைதான்.... அங்கங்கே குத்தும் மீசை தான்........ முத்தங்கள் போடும் ஓசை தான்.......மனதை மயக்கும்.....நீராட வந்த வேளை தான் நீயாக வேண்டும் ஓடைதான்...நீயாள வந்த பாவை நான் கனவை சுமக்கும்...........ரெட்ட தொட்டில் ஒற்றைக் கட்டில் செய்ய சொல்ல்வாயோ..... மெத்தையே வேண்டாம் மத்தபுல்லே போதும் என்பாயோ............சுகமா.... சுமையா .......இவள் தான் அப்போதுமழையா வெயிலா மனதில் இப்போது.....

முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்............முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..............முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்........முதல் முதல் பார்த்தேன் உயிர் வரை சேர்த்தேன் உயிரே உன்னிள் நான் என்னைத் தேடினேன்..................இமையே சுமையாகும் உனைப்பார்க்கும் நேரம் இமையாய் இமை வேண்டும் எனக் கேட்கத் தோனும்..............மழையா......... வெயிலா........ மனதில் இப்போது....

புரியவில்லை...

சுகந்திர பறவயாய்

பறந்து திரிந்தேன்...
என்னை ஜோசிய கிளியாய்
சிந்திக்க வைத்துவிட்டாய்
அன்பே......

நாம் பழகின நாட்களுக்கு
அர்த்தம் மரணித்ததா?....
விதியின் விளையாட்டில்
நாம் இருவர் மட்டுமா
மாட்டிக்கொன்டோம்...?

ஒரு கனம் நீ சிந்தித்து
செயற்பட்டிருந்தால்...
உன்னை என் தலை
மீது வைத்து வணங்கியிருப்பேன்....
சிந்திக்காமல் நீ
சிதறிவிட்டாய் அன்பே....
அது என்னை சிந்திக்க
வைத்துவிட்டதடா...

உன் உயிரை, உனக்கே உரியதான
உயிரை...விற்றுவிட்டாய்
என மனம்
புலம்பித்தவிக்குதடா...
எதிர் பார்ப்புகள்
நமக்குள் இல்லை...
எதிர் பார்க்க
வைத்துவிட்டாய்.....

எதிர்காலம் நன்றாக
இருக்குமா என....
வேதணைகள் எனக்கென
சொந்தமாகிவிட்டதோ

கண்ணீர் எழுதிடும் காவியம்...............


என் அருகில்
நீ இருந்தால் தான்
உன்னால் என்
வேதனையை உணரமுடியுமா..?
என் உள்ளமெங்கும்
நீதானே குடிகொண்டிருகின்றாய்
என் வலியை
நீ உணர வாய்ப்பில்லையோ.........?
நீ சொல்கின்றாய்
சும்மா யோசித்து
குழம்பிக்கொண்டிருகிறேன்
என்று.............
உன்னை விட்டு விட
முடியாமல் தானே நான்
குழம்பிக்கொன்டிருக்கிறேன்........
ஏன் அதை நீ ஏற்க மறுக்கின்றாய்.....
என் வேதனையை
நீ உணர வாய்ப்பில்லை தான்
காரணம் உன்னை நான்
உடலால் தாங்கவில்லையே
என் உள்ளமதில் அல்லவா
தாங்கிக்கொண்டிருக்கிறேன்
என் உள்ளத்தின் வலியை
நீ அறிந்திடுவாய்
என்பதாலோ என்னவோ
என் கண்ணீரால்
நீ இருக்கும் இதயத்துக்கு
வேலி அமைக்கின்றேன்.
என் கண்ணீரெல்லாம்
வெறும் கானல் நீராய் ஆகிடுமா?
ஆனால் ஒன்று மட்டும் நிஜம்
நான் வடித்திடும் கண்ணீர்த்துளிகலெல்லாம்
என் இதயத்தில் உன் பெயரை
மட்டுமே செதுக்கிக்கொண்டிருக்கின்றன..


என்றும் அழியாக் காவியமாக சிறந்திடுவதற்காக


இக் காவியங்கலெல்லாம் நம் காதலின் ஆயுளை குறைத்திடுமா? இல்லையேல் என்றென்றும் உன்னொடு வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துகின்றனவா..........?

சுகமான சுமைகள்..



உன் கண்களைப் பார்த்திடும்
பொழுதினில் குழப்பமான என் உள்ளம்
எல்லாவற்றையும் மறந்து
உன் அழகான உருவை மட்டும்
தாங்கிக்கொண்டிருக்கின்றதே ......
எங்கனம்?


உன் சிரிப்பை ரசித்திடும்
பொழுதினில்
இந்த உலகிலேயே
நான் மட்டுமெ அதிர்ஷ்டசாலியாக
தோன்றுகிறதே காரணம் அறிவாயா?
உன் சிரிப்பு என் வாழ்வே
நீதானடி என்று ஆசி கூறுகின்றதே.......
எங்கனம்?


உன் அமைதியான அணைப்புகள்
கூட நான் என்றென்றும்
உனக்கே உரியவன் என்றே
இனித்திடுதே.......
எங்கனம்?


உன் அன்பு முத்தங்கள் கூட
நான் இருக்கின்றேன் எதற்காக
இத்தனை சோகங்கள் என்று
ஆறுதல் கூறுகின்றதே....
எங்கனம்?


எத்தனை சோகங்கள்
வந்தாலும் நீ என்னுடன்
இருக்கும் வரையில்
அத்தனையும் சுகங்களே.........

உனக்காகவே காத்திருக்கின்றேன் ......


இத்தனைக் காலமும் நான் வாழ்க்கைப் பாதையில்

காதலில் விழாமலே பயணித்தேன்

காரணம் அங்குள்ள போதையால்

என்னை சீராட்டி சோறூட்டி வள்ர்த்த தாயையும் தாயன்பையும் மறந்துவிடுவேன் என்பதால்,

ஆனால் அங்கிருப்பது போதையல்ல அன்பு மட்டுமே என்பதை

உன்னை காதலிக்கும் போதே உணர்ந்து கொண்டேன்

எல்லோரையுமே நேசிக்கத் தெரிந்த எனக்கு

உன்னை மட்டும் அதிகமாக நேசிக்கும் வித்தையை கற்றுக்கொடுது விட்டாயே எப்படியடா?

எத்தனையோ துன்பங்களும் எண்ணங்களும்

மனதிலே நில்லாத ரயில் போல ஓடிக்கொண்டே இருந்தாலும்

உன்னைப் பார்த்த நொடிதனில் எங்கே ஒழிந்துகொண்டனவோ

நான் அறியேனடா..............

எத்தனையோ மொழிகள் அத்தைனையும்

உன் கண்கள் என்னிடம் பேசிடும் மொழிகள் போலாகுமா?

ஓராயிரம் வார்த்தைகள் என்னில் மொழி தெரியாமல் சிக்கிக் கொண்டிருக்கின்றன

என்றைக்கு நீ எனக்கு முழுவதுமாக சொந்த்மாகின்றாயோ

அன்றைக்கே அவை கண்ணீராக வெளிவரும்.............

அந்த நாளை எண்ணிக்காத்திருக்கின்றேன் பொருமையோடு(உனக்காகவே)


அன்பும் வேன்டாமே அவஸ்தையும் வேன்டாமே......

பிரிய மனமில்லை...

சேர வழியுமில்லை....
சாக துணிவுமில்லை....
நீ போகும் பாதை எங்கும்...
கல்லும் முள்ளும் தானடி.....
உன் நிறைவான வாழ்க்கைக்கு....
நீ நடக்கும் பாதை
கண் இருந்தும் குருடானதடி...
நீ நடந்திடும் போதினில்.....
காயங்கள் உனக்கே சொந்தமடி.......
பாவங்கள் எனக்கே சொந்தமடி.......
நிலை தடுமாறும் எண்ணங்களை...
நிலை நிறுத்திக் கொள்ளடி!
என்னால் தானடி உன் துயரம்....
நீயே கண்களால் காண்கிறாய்....
அழகாய் பேசிய கிளியை ...
ஊமையாக்கி விட்டதாக....
என் மனம் புலம்பித் தவிக்கிறதே...
அன்பும் வேன்டாமே.....
அவஸ்தையும் வேன்டாமே....



தோல்வியுற்ற காதலுக்கு தொடர்ச்சி எதற்கு?



உழத்தெரியாதவனுக்கு வயல் எதற்கு?

கோயிலில்லா ஊரில் குடி எதற்கு?

சீரான ஊருக்கு தலைவன் எதற்கு?

கல்வியறிவில்லாதவனுக்கு புத்தகம் எதற்கு?

தோல்வியுற்ற காதலுக்கு தொடர்ச்சி எதற்கு?

ஒரு காதல் கடிதம்........


அன்பே....!என் ஆறுயிரே...

இனைந்தோம் இணையம் மூலமாய்....

இன்று வரை நமக்குள்....சந்தோஷமும் துக்கமும்.....

மாறி மாறி வந்த வன்னமே.......

நீ என்னை நினைக்கின்றாய் -

அதைநீ சொல்லி நான் புரியவேன்டியதில்லை கண்னே...

என் மனம் அறியும் உன் நிலை....

ஆயிரம் ஆயிரம் கதை பேசினாலும்....

உன் முகம் பார்த்து கதைப்பது போலாகுமா...

அப்படியே உன்னை உற்றுப் பார்த்துக்கொன்டே..

.இருந்திடும் போதினில் சோகம் தெரிவதில்லை...

என் உயிரில் கலந்து விட்டதடா....

உன் பெண்மையின் வாசனைகள்....என் ஸ்வாசம் என்னை மறந்து...உன்னையே ஸ்வாசிக்க ஆரம்பித்துவிட்டன...

பிரிவுகள் நிரந்தரமில்லை அன்பே நமது ஜீவன் பிரியும் வரையில்....

.என்றும் உனக்காக காத்திருக்கும்.....உன் அன்பின் நிஷானி

என் மனம்


என் மனமே
ஒரு கல்
அதை உருக்கியது
உன் சொல்