*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/03/2007

கண்ணீர் எழுதிடும் காவியம்...............


என் அருகில்
நீ இருந்தால் தான்
உன்னால் என்
வேதனையை உணரமுடியுமா..?
என் உள்ளமெங்கும்
நீதானே குடிகொண்டிருகின்றாய்
என் வலியை
நீ உணர வாய்ப்பில்லையோ.........?
நீ சொல்கின்றாய்
சும்மா யோசித்து
குழம்பிக்கொண்டிருகிறேன்
என்று.............
உன்னை விட்டு விட
முடியாமல் தானே நான்
குழம்பிக்கொன்டிருக்கிறேன்........
ஏன் அதை நீ ஏற்க மறுக்கின்றாய்.....
என் வேதனையை
நீ உணர வாய்ப்பில்லை தான்
காரணம் உன்னை நான்
உடலால் தாங்கவில்லையே
என் உள்ளமதில் அல்லவா
தாங்கிக்கொண்டிருக்கிறேன்
என் உள்ளத்தின் வலியை
நீ அறிந்திடுவாய்
என்பதாலோ என்னவோ
என் கண்ணீரால்
நீ இருக்கும் இதயத்துக்கு
வேலி அமைக்கின்றேன்.
என் கண்ணீரெல்லாம்
வெறும் கானல் நீராய் ஆகிடுமா?
ஆனால் ஒன்று மட்டும் நிஜம்
நான் வடித்திடும் கண்ணீர்த்துளிகலெல்லாம்
என் இதயத்தில் உன் பெயரை
மட்டுமே செதுக்கிக்கொண்டிருக்கின்றன..


என்றும் அழியாக் காவியமாக சிறந்திடுவதற்காக


இக் காவியங்கலெல்லாம் நம் காதலின் ஆயுளை குறைத்திடுமா? இல்லையேல் என்றென்றும் உன்னொடு வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்துகின்றனவா..........?

No comments: