*நிஷாவின்* கவிதைச்சாரல்

கவிதைச் சாரலில் நனையலாம் வாருங்கள்

*நிஷாவின்* கவிதைச்சாரல்

10/08/2007

என் கண்ணீராற்றில் கவிதை வடிக்கும் உன் நினைவுகள்


பசுமையாக வளர்ந்த என்னை

காதல் பிணியில் மாட்டி விட்டு

வேடிக்கை பார்க்கும் ஆடவனே

ஒவ்வொரு நிமிடமும்

எனக்குள் நானில்லை

நீதானே பேசிக்கொண்டிருக்கின்றாய்....

ஆனால் நீ உனக்குள்

யாரோ கட்டிய தாஜ்மகாலை நிலை நிருத்தி

என் மண் குடிசையை இடித்து விட்டாய்


நானோ மேகமில்லாத வானத்தில் குடியிருக்க

நீயோ பசுமை கொட்டும் வனத்தில்

கருங்குயில் இசையமைக்க

சந்தோஷ ஊர்வலம்....

மகளிருடன் அலங்கோலமாய் நடக்கையில்

என்னுள்ளம் அனலைக்கண்ட நீராய் கொதிக்கின்றது


ஆனால் கண்ணே உன்னிதயத்தில் நானில்லாவிட்டாலும் என்னிதயத்தில் உன்னினைவுகள் கண்ணீராற்றில் கவிதை வடித்துக்கொண்டே இருக்கும்............

2 comments:

Anonymous said...

hi nisha.. un kavidhai yen kannil otri kolgiren. anaal ??????????
naan aan magan un kavidhai yenakku porundhum.yenenraal oru thavarum seyyamal naan yen manaivikku dhooramaanen .kaaranam therupennaal vazkayai izundhen. yenilamaiyai varnikka mudiyaadhu....thodargiren

நிஷானி said...

thx for ur comment sriveera,
dunt worry ....
ungal nilaimai enakku purigirathu aanal ungal manaivikku thurogam seythathai verukkinren or pennaaga
plz ungal thavarai unarnththu thayavu seythu palakkathai maatrikkollungal
as a frnda nan solluratha konjam yosinga sri....
kadaisi varai kooda varaporathu unga manaivi pillaikal matume...
ungkal ilamaiyum panamum ungalai vittu vilagum podhu ivvaaraana uravukalum ungalai utharidalam...
anyhow unglukaga pray pannikiren ...nalla padiya neenga unga wif ku matume sontha maganumnu
bye tc